Thursday, September 2, 2010

அன்பால் உலகை வெல்வோம்



ஒரு சாதாரண  எழுத்தாளனாக முயற்சிக்கும்  எனக்கு,  எனது முதல் பதிவிற்கு தோழர், தோழிகள் அமோக ஆதரவையும், வாழ்த்துக்களையும் ஒரு சேர தெரிவித்து இருந்தீர்கள்.  உங்களின் ஆதரவும் வாழ்த்துக்களும் உண்மையில் என்னை விரைவில்  ஒரு எழுத்தாளனாக ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

அன்பு மிக வலிமையான ஆயுதம். அன்பினால் நாம் எதையம் சாதிக்கமுடிய்ம்... தீமையை  வெல்லக்கூடிய மிக கூர்மையான ஆயுதம் அன்பு ஒன்றே...  ஒருவரின்  பகையை, பகையால் வெல்வது தற்காலிக வெற்றியாகத்தான்  இருக்கும்... "பகைமை" ஒரு முடிவில்லா தொடர்கதை...!?   ஒருவர் மீது  ஒருவர் கொண்டிக்கும் மாயமற்ற அன்பினால் உலகை வெல்ல முடியும். 

இந்நூற்றாண்டில்    அன்பினால் உலகத்தை வென்ற தெய்வ பெண்மணி அன்னை தெரசா அம்மையார் அவர்கள்.  அவர்களை  நாம் நம்முடைய வாழ்வில் உதாரணமாக  எடுப்போம்.  அன்பால் உலகை வெல்வோம்...!  "அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் நடப்பட்ட  மரம் போன்றது "

"பல்லுக்கு பல்"       "கண்ணுக்கு கண்"   "அடிக்கு அடி"        "உயிருக்கு உயிர்" என்று இருந்தவர்களின் குடும்பம், நாடு, இப்போது தீண்டத்தகாத  குடும்பமாகவும், தீவிரவாத  நாடாகவும், நிச்சயமற்ற வாழ்க்கையும் தான் அங்கே இருக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்...!!?  

வாழ்கின்ற  சிறிது காலத்தில் நாம் நம் குடும்ப்பத்தை நேசிப்போம்...,  குடும்ப உறவை நேசிப்போம்..., ஊரை நேசிப்போம்..., நாட்டை  நேசிப்போம்..., அன்பினால் உலகை  நேசிப்போம்...!! 

அன்பே சக்தி..
அன்பே தைரியம்..
அன்பே சுகந்தம்..
அன்பே சாந்தம்..
அன்பே ஆரோக்கியம்..
அன்பே  கடவுள்..  
அன்பே  சிவம்.. 
அன்பே இறைவன்.. 
அன்பே யாவும்......!! 

 அனைத்து மதமும்,அனைத்து புனித மத நூல்களும்  போதிக்கும் கருப்பொருள்   ஒன்றே  ஒன்று அதுவே  "அன்பு"

அன்புடன் மீண்டும் சந்திப்போம்.. சிந்திப்போம் உயர்வையே...!                           
                                
                                 

No comments: