தற்செயலாக சில பதிவர்களின் பதிவுகளை பார்க்கநேரிட்டது, அதில் வந்துள்ள சில பின்னூட்டங்களும் அதற்கு விளக்கங்களும் வந்ததைப்பார்த்து, எனக்குள் எழுந்த சில ஐயப்பாடுகளின் வெளிப்பாடே இந்த பதிவு.
இந்தியாவிற்கு என்று பண்பாடு, கலாசாரம் மற்றும் அதை சார்ந்து சில சட்ட திட்டங்கள் உள்ளன .இந்தியாவை இரண்டாம் நிலைக்கு கொண்டு செல்வதாக நினைத்து, நம் பண்பாட்டின் உள்ளார்ந்த கருத்தை உணராமல் அறிவாளிகள் சிலர் பேசுவது நம்மை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டுசெல்லும் என்பதை உணராமல் அவர்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது .
வரலாற்றை புரட்டி பார்த்தால் ஆதி காலத்தில் மனிதன் காடுகளில் காட்டுமிராண்டித் தனமாக தன் விருப்பம் போல் வாழ்ந்தான். (LIVING TOGETHER) அப்படி வாழ்ந்த மனிதன் பின்னர் தனக்கென்று ஒரு கட்டுகோப்பான வாழ்க்கை வாழ தெரிவு செய்தான். அந்த மாதிரியான வாழ்க்கை அவனுக்கு பிடித்துவிடவே அது நாளடைவில் குடும்பம் ஆக வளர்சியடைந்தது. குடும்பம் என்று வந்தவுடன் கணவன், மனைவி , பிள்ளைகள் , அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் சொந்த பந்தம் என்று ஒரு உறவு முறைகளை ஏற்படுத்தி கொண்டு ஒரு சமூதாயமாக வாழ தொடங்கினான் . அது அவனுக்கு பாதுகாப்பை கொடுத்தது. அப்போது தனக்காக மட்டும் வாழாமல் தன்னை சார்ந்தவர்களுகாகவும் வாழ தொடங்கினான். அப்போது அவன் தன்னுடைய சில விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்ய வேண்டி வந்தது. ஒருவருக்கு ஒருவர் சார்ந்து வாழ ஆரம்பித்தனர். சிலவற்றில் விட்டு கொடுத்தும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். சந்ததி வளர தொடங்கியது .....குடும்ப எண்ணிக்கை கூடியது.... தன் குடும்பதிற்காக வாழ ஆரம்பித்தான் .அங்கே அவனுக்கு பாதுகாப்பு கிடைத்தது .
"living together " கலாச்சாரம் என்பது ஒரு குறுகிய வட்டத்தை மட்டுமே குறிக்கும். ஒருவரின் உடல் தேவை அல்லது உணர்வு சம்பந்தப்பட்டதாகவே தோன்றுகிறது .உடல்பசி அல்லது இச்சை முடிந்துடன், "பூ விட்டு பூ தாவும் வண்டு போல்" வேறு ஒரு துணையை தேடுவது போன்றதுதான் இந்த கலாச்சாரம் . அங்கே வளர்ச்சிக்கு இடம் இல்லை மீண்டும் இது நம்மை கற்கால காட்டு மிராண்டி தனமான வாழ்க்கை சூழலுக்கே எடுத்து செல்லும் ஒரு அபாயமான ஆபத்தான கலாச்சாரம் என்றே எனக்கு தோன்றுகிறது. உலகம் ஏதோ ஒரு விதியின் கீழ் அழகாய் இயங்குகிறது. அந்த ஒரு விதி என்பது தான் இங்கே வாழ்க்கை சக்கரத்திற்கு அச்சாணி, அந்த அச்சாணி சரியான விதத்தில் பொருந்தி இருந்தால் தான் வாழ்க்கை சக்கரம் நல்ல முறையில் செல்லும். அச்சாணி இல்லாத சக்கரம் தன் இலக்கை அடைந்ததாக சரித்திரமே இல்லை. தனக்கென்று வாழ்வதை விட தன்னை சார்ந்தவர்களுக்காக வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவே இருக்கும். தனக்காக மட்டுமே வாழும் வாழ்க்கை இருந்தால் நமக்கு இத்தனை அறிவியல் வளர்ச்சி, இத்தகைய மாற்றங்கள் வந்திருக்காது.
நாம் வாழ்வது ஒருமுறைதான் அந்த வாழ்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று சில வரைமுறைகளோடு சில குறிக்கோளோடு தன் வாழ்கையை அர்த்தமுள்ளதாக வாழ்கிறான். நாம் என்பது ஒரு விசாலமான பார்வை, தன்னுடைய என்பது குறுகிய வாழ்க்கை. அது கடிவாளம் இடாத குதிரையில் சவாரி செய்வது போன்றது. கடிவாளம் இல்லாத குதிரை சரியான இடத்தை சென்றடைவது முடியாத காரியம் . தன்னுடைய உடலில் ரத்தம் சீராக ஓடும் வரையில் எல்லாம் சுவையாகத்தான் இருக்கும், உடல் முதிர்ந்து சோர்ந்து போன நிலையில். ஆதரவிற்கு அங்கே நாம் காண்பது வெற்றிடம் மட்டுமே. அது .அவனை தற்கொலையில் கொண்டு போய் விட்டுவிடும் .அவன் வாழ்கையை சுயமாகவே முடிக்கின்ற சூழல் ஏற்படும் இது உறுதி.

living together என்பது ஒருவருடைய சுய விருப்பு வெறுப்பு மட்டுமே சார்ந்தது. இந்த முறையில் வாழ்ந்த ஒரு பெண்ணை மனைவியாக ஏற்று கொள்ள உங்கள் மனம் ஒத்துகொள்ளுமா ....? அந்த முறையில் வாழ உங்கள் மகனையோ, மகளையோ அனுமதிப்பீர்களா....? மனம் ஒரு குரங்கு ....மனநிலை மாறுகின்ற சூழ்நிலையில் அடிக்கடி உங்கள் மகனையோ மகளையோ ஜோடிகளை மாற்றி கொள்ள அனுமதிப்பீர்களா.....?? வேடிக்கையாக எங்கோ கேட்ட ஞாபகம் (உன் குழந்தையும் என் குழந்தையும் இப்போது நம் குழந்தையுடன் விளையாடுகிறது)
ஒரு முறை ஜோடி மாறினாலே இந்த வேடிக்கை அதுவே பலமுறை ஜோடிகளை மாற்றினால் எப்படி இருக்கும்...?? சிந்தித்து பாருங்கள்.......அவர்களின் குழந்தைகளை எப்படி , யாருடைய மகன் , மகள் என்று அழைப்பது...?? முக்கியமா யார் இன்சியலை போடுவாங்க....? இது நாம பழைய படி கற்கால வாழ்க்கைக்கு போவது போல் இருக்கிறது....இஷ்டம்போல் வாழும் மிருக ஜீவன்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்....இந்த முறையை ஆதரித்து வரும் பின்னூட்டங்களை பார்க்கும் போது அவர்கள் தங்களது ஆறாவது அறிவை பயன்படுத்துகிறார்களா? என்று சந்தேகம் வருகிறது
living together ....என்ற கலாசாரம் இப்போது அதிகம் பேசப்படுவது நம் நாட்டில் அதிகம் படித்த ஆனால் தற்போது மேலை நாடுகளில் வசிக்கும் ஒரு சிலரிடம் மட்டுமே காண்பதாக எண்ணுகிறேன் . ஒரு பெண்ணோ ஆணோ தன் தேவைக்கு அதிகமாக பொருள் சேர்க்கும் போது, உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு இது போன்ற சீர்கேடுகளை விரும்ப தொடங்குவார்கள் என்று நினைகிறேன் . அங்கே பொருளாதாரரீதியில் தன்னிறைவு அடைந்ததாக நினைப்பது,எதையும் துணிந்து எதிர்கொள்ளும் மனோநிலை, சமூக பாதுகாப்பை பற்றி கவலைபடாத ஒரு நிலை வந்த பின்னால் (எதற்கும் துணிந்தவர்களை, எதிர்காலத்தை பற்றி சிந்திக்காதாவர்களை) அவர்களை பற்றி பேசுவது வீண் .

மாற்றங்கள் தேவை தான், அது மற்றவர்களை பாதிக்காத வரை...நம் கலாசாரத்தில் குறைபாடுகள் இருக்கலாம் அதை சரி செய்வதற்கு நல்ல வழிசொன்னால் நன்றாக இருக்கும் அதை விட்டுவிட்டு தலை வழி போய் திருகு வழி வந்த கதை ஆகிவிட கூடாது ...........????
மனிதனுக்கு மகிழ்ச்சியிலே சிறந்த மகிழ்ச்சி எது என்றால் ஒன்றை பெறுவதை விட விட்டுகொடுப்பதில் தான் இருக்கிறது. (தனிப்பட்ட விருப்பு வெறுப்பு) குடும்பம் என்ற நம் பந்தத்தோடு விட்டு கொடுத்து அதை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டு பிற்கால சந்ததிகள் நன்றாக வாழ நாம் வழிகாட்டியாக இருப்போம்.
இப்படி ஒரு பதிவை போடுவதால் நானொன்றும் கலாச்சார தூதுவனோ , பாதுகாவலனோ இல்லை, ஒரு சாதாரண இணையதள வாசகன் மட்டுமே .